Seeking from Guru


My anger, my joy, my frustration

Arising not from my wife nor my child

Neither from my society nor my god

Is all but a mere reflection of what lies in me?

Oh, these terrible chains! I wonder how to break and go beyond

The Blessed One has seen me doting on Him to take me through beyond this pain and pleasure trough

Advertisements

My Guru


Muralidhara swamigal is my guru who inspired me from his upanyasam. By watching his speech I get more bhakthi to lord and also to him. If god bless me oneday I will be an adherent sishya (disciple) to him.

தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!


தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!

ஆனைமுகனுக்குத் தம்பியாய் வந்த ஆறுமுகனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த பன்னிரு தோள்களைக் கொண்டவனே! பன்னிருகைப் பரமனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! செவ்வேள் முருகனே! திருமாலின் மருகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு மனநலத்தையும், உடல் நலத்தையும் தந்தருள வேண்டுகிறேன்.
* அம்மையப்பர் ஈன்றெடுத்த அருந்தவப்புதல்வா! தேன்சிந்தும் புது மலர்களை விரும்பி அணிபவனே! திருத்தணி முருகனே! கந்தனே! கடம்பனே! கார்த்திகேயனே! சூரபத்மனுக்கு வாழ்வு தந்த வள்ளலே! வெற்றிவீரனே! வள்ளிக்கு வாய்த்தவனே! வாழ்வில் தடைகளைப் போக்கி நல்வழி காட்டுவாயாக.
* குயிலைப் போல இனிய மொழி பேசும் தெய்வானை மணாளனே! வள்ளிநாயகியை காதல் மணம் செய்தவனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! வடிவேலனே! விரைவில் என் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த அருள்புரிவாயாக.
* மலைக்கு நாயகனே! மயிலேறிய மாணிக்கமே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் கரை சேர்ப்பவனே! காங்கேயனே! அறுபடைவீடுகளில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவனே! இன்னல்களைப் போக்கி வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நீயே தர வேண்டும்.
* உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வெற்றி வேலைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொறுக்கும் குணக்குன்றே! சிவகுருநாதனே! எட்டுத்திக்கிலும் அருளாட்சி புரிபவனே! சரவணனே! சேவற்கொடியோனே! என் வசந்தத்தை வரவழைக்கும்படி சேவலைக் கூவச் செய்வாயாக.
* தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் உமைபாலனே! குறிஞ்சியின் முதல்வனே! துன்பமெல்லாம் போக்கி, ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த குருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.
* தண்டாயுதபாணியே! சிங்கார வேலனே! ஒருமையுடன் தியானிக்கும் பக்தர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! கிரவுஞ்சகிரியை இருகூறாகப் பிளந்த வேலவனே! அகத்தியருக்கு உபதேசித்த என் ஆண்டவனே! எனக்கு நல்லறிவையும், மதிநுட்பத்தையும் கொடுப்பாயாக.
* வேதத்தின் உட்பொருளே! அழகில் மன்மதனை வென்றவனே! பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரப்பெருமானே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! சரவணப்பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு கனி ஈந்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் மன விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.
* சண்முகப்பெருமானே! நான் மட்டுமல்லாமல், என்னைச் சேர்ந்தவர்களான மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் உன் அன்பர்களாக வாழச் செய்வாயாக. உன்னருளால் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

 

முருகன் பாடல்கள்

தைப்பூசத்தன்று முருகப்பெருமானைப் புகழ்ந்து, இந்தப் பாடல்களைப் பக்தியுடன் பாடி வளம் பல பெறுங்கள்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்று ஓதுவார் முன்.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்- வாரி
குளித்த வேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்த வேலுண்டே துணை.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குடிகொண்டவே.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.

ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க! யானை தன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க!


இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

 

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

 

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

 

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

 

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவி பட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

Mahan – Gururagavendra lyrics


உலகமெல்லாம் ஓடி உன்னை தேடி நான் எங்கவோ
உய்ரிகுள்ளே ஜோதி விழி மூடி அதை பார்கவோ
உன்னை பாட மொழியுமில்லை உன்னை காண விழியுமில்லை
இறைவன் அருளே உனதடி சரணமே  அடைந்து விடவோ கலந்து விடவோ நினைந்து விடவோ.

நதியில் ஒரு படகிலே துடுபிலா பயணமே
நதியும் உனதே படகும் உனதே மனம் அறியுமோ.

பிறவி தரும் வினைகளே வினைகள் தரும் பயன்களே
குருவின் அருளே வினைகள் தீர்க்கும் விதி புரியுமோ.

வறுமையும் இம்மையும் உனது இனில்
இன்பமும் துன்பமும் மனதிலே

பிறப்பதும் பிரிவதும் முடிந்து போய்விட எனதுயிர் உன் பதம் சேருமோ

ஆதி அந்தம் ஆன எந்தன் இறைவா…

குருவே சரணம் குருவே சரணம்